500 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் போலியானதா? வெளியான தகவலால் பெரும் குழப்பம்

Report Print Murali Murali in சிறப்பு

பன்னிப்பிட்டியில் கொள்ளையிடப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட கல் இரத்தினக்கல்லா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே இதனை தெரிவித்துள்ளார்.

பன்னிபிட்டிய - அரவ்வாவல பகுதியிலுள்ள மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்த, சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் காணாமல் போயிருந்தது.

கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவம் குறித்து பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. விசாரணைகளையடுத்து, கடந்த 4ம் திகதி குறித்த இரத்தினக்கல் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மீட்கப்பட்ட கல் மதிப்பீட்டிற்காக தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபையிடம் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, குறித்த கல் இரத்தினக்கல்லா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கல்லை அரசுடமையாக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.