பேரறிவாளன் உள்ளிட்ட 7 ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ராகுல் வெளியிட்டுள்ள தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு
342Shares

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் ஊடகவிலாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை.

எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சினையா? ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்டப் பிரச்னை தொடர்பானது. நீதிமன்றம்தான், ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவுளை, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சுமார் 28 வருடங்களாக சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.