இனவழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிப்பு!

Report Print Dias Dias in சிறப்பு

வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் உரிய ஆதாரங்களுடன் தமிழர் மரபுரிமைப் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்டது.

இக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக சென்றுள்ள இணைத்தலைவர் வி.நவநீதன், ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் 11/03/2019 அன்று அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல்கள், வனவளபாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் மக்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களுடன் கூடிய அறிக்கை ஐ.நா விற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ந்து பக்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளதுடன் 14ம் திகதி நடைபெற்ற மனித உரிமை பேரவையின் பிரதான கூட்டத்தொடரிலும் உரையாற்றினர்.

முழுமையான அறிக்கையை படிக்க இங்கே அழுத்தவும்

you my like this video


Latest Offers