தூக்கு தண்டனையை நிறைவேற்ற அதிதீவிர நடவடிக்கை! மணல் மூட்டையை தூக்கிலிட்டு சோதனை

Report Print Murali Murali in சிறப்பு

அரசாங்கம் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில், அலுகோசு பதவிக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்று முடிந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையிலேயே, தற்போது தூக்கிலிட பயன்படுத்தும் தூக்குமேடையை அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். இதன்போது மணல் மூட்டையொன்றை தூக்கிலிட்டு பரிசீலித்துள்ளனர்.

நாட்டில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்கு போதைப்பொருளே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ள நிலையில், தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவேன் என உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக தூக்கிலிடப்படவுள்ளோரின் பட்டியல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது தூக்குமேடை பரிசீலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.