சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகளை வழங்கியது யார்? யஸ்மின் சூக்கா வெளியிட்ட தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு

சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் (International Truth and Justice Project) யஸ்மின் சூக்கா இதனை தெரிவித்துள்ளார்.

கோத்தாபயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை தொடர்பில் லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கோத்தபாய மீது தற்போது நாம் வழக்கு தொடர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக காணப்படுகின்றது.

சித்திரவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் அவரினால் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் இந்த செயற்பாடுகளுக்கு சட்டபூர்வமாக பொறுப்புடையவராவார்.

பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டிருந்ததாக பல ஆண்டுகளாக கோத்தபாய ராஜபக்ச தனது பகிரங்க அறிக்கைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே தற்போது கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers