தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! -வெளிவரும் அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்

Report Print Niraj David Niraj David in சிறப்பு

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களையும் முற்றாக அழிப்பதற்கு பிரித்தானியா ஸ்ரீலங்காவிற்கு 80 களில் இருந்தே ஆதரவு வழங்கி வந்துள்ளதாக பிரித்தானியாவின் முன்னணி புலனாய்வுச் செய்தியாளரான பில் மிலர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இறுதியுத்த காலப்பகுதியில் ஏராளமான நவீன ஆயுதங்கள், செய்மதி புகைப்படங்கள், தொழில்நுட்ப உதவிகள் என்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பொன்றை மேற்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் பிரித்தானியா செய்துள்ளதாக ஐ.நாவின் முன்னைநாள் உதவிச் செயலாளர் Denis Halliday தெரிவித்திருந்தார்.

தமிழின அழிப்பிற்கு பிரித்தானியா செய்த உதவிகள் பற்றிய பல ஆதாரங்களைச் சுமந்துவருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: