13 பேருக்கு எந்த நேரத்திலும் மரணத்தண்டனை நிறைவேற்றப்படலாம்!

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கையில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை இன்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 43 வருடங்களாக இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் திகதி குறிக்கப்படாதபோதும் குறித்த 13பேருக்கும் உடனடியாக மரணத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணைகள் இடம்பெற்றனவா? என்பது ஆராயவேண்டிய விடயமாகும்.

1976ம் ஆண்டுடன் மரணதண்டனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் பின்னோக்கி செல்லக்கூடாது என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.