வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத் திருவிழாவில் இன்றையதினம் நந்திகேசுவரர், யாளி வாகன உலா இடம்பெற்று வருகின்றது.
தற்போது இதற்கான பூஜை ஆராதனைகள் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரம்மாண்டமாக இடம்பெற்று வருகின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக இந்த திருவிழா இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.