புத்தாண்டில் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நேரமும், அணிய வேண்டிய ஆடைகளும்!

Report Print Murali Murali in சிறப்பு

சித்திரை புத்தாண்டில் பௌத்த சம்பிரதாயங்களுக்கு அமைவான தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் நாளை காலை 7.40ற்கு இடம்பெறவுள்ளது.

இந்த தேசிய வைபவம் களுத்துறை ஸ்ரீ சுபோதிராஜ ராம மஹா விஹாரை வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.

கிழக்கு நோக்கிய பார்வையுடன், பச்சை நிற வஸ்து அல்லது அதற்கு சமமான ஆடை அணிந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

இதேவேளை பௌத்த சம்பிரதாயங்களுக்கு அமைவாக எதிர்வரும் 18ம் திகதி காலையில் சுபவேளையான 4.52ற்கு புத்தாண்டில் தொழிலுக்குச் செல்லும் நேரம் உதயமாகிறது.

தொழிலுக்குச் செல்வோர் பச்சை நிறம் அல்லது அது சார்ந்த வர்ணத்தைக் கொண்ட ஆடை அணிந்து கிழக்கு நோக்கிய பார்வையுடன் செல்லலாம்.

Latest Offers