மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! ஈழ அகதிகளுக்கும் பாதிப்பா?

Report Print Murali Murali in சிறப்பு

மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் பலருக்கு நெருப்புக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், அகதிகள் இருவர் Port Moresby வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் 15-20 அகதிகள் இந்த நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.

உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல இந்தக்காய்ச்சல் ஏனைய அகதிகளுக்கும் பரவிவிடாத வகையில், அகதிகள் தங்குமிடங்கள் அனைத்தும் இரசாயன ரீதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நெருப்புக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு அகதி அண்மையில் மனுஸ்தீவு வைத்தியசாலையொன்றுக்கு அழைத்து சென்ற போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு ஒருகோடி 60 லட்சம் பேர் நெருப்புக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகுவதாகவும் இவர்களில் 16 ஆயிரம் பேர் ஆண்டொன்றுக்கு மரணிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையிலிருந்து புகலிடம் கோரி சட்டவிரேதமாக அவுஸ்திரேலியா சென்ற பலர் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கும் நெருப்புக்காய்ச்சல் ஏற்பட்டிருக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers