இலங்கையை அச்சுறுத்தும் ஐ.எஸ் அமைப்பு! படையினருடன் கைகோர்க்கும் முன்னாள் போராளிகள்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், தமது அனுபவங்களை படையினருடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை பாதுகாப்பு பிரிவினர், உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கான கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இதுவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான பிரதான காரணமாகும். சர்வதேச ரீதியில் செயற்படுகின்ற பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டமொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது.

30 வருட கால யுத்தத்தின் போது இலங்கையில் காணப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், கடந்த 10 வருடங்களில் தளர்த்தப்பட்டமையும் இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையில் திடீர் செல்வந்தர்களான பலர் இருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் திடீர் செல்வந்தர்களான தரப்பினர் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் செயற்படவில்லை.

இந்நிலையில், தற்போதேனும் அவர்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்தும் புலனாய்வு துறையினர் விசாரணைகளை நடத்த வேண்டும்.

இலங்கை எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கான உதவிகள் குறித்து இலங்கை அரசாங்கம் தம்மிடம் கோரும் பட்சத்தில், அதனை உரிய வகையில் செய்ய தாம் தயாராக இருக்கின்றோம்.

எவ்வாறாயினும், இராணுவத்தினர் கோரிக்கையை தாம் ஏற்று செயற்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் தமக்கு பாரிய அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஹிஸ்புல்லாஹ்வுக்கு தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு? தொடர்ந்து வெளிவரும் ஆதாரங்கள்