தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் கட்டுவாபிட்டி செபஸ்தியன் ஆலயத்தில் இடம்பெற்ற முதலாவது ஆராதனை!

Report Print Murali Murali in சிறப்பு
265Shares

நீர்கொழும்பு - கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் தேவாலயத்தில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையின் கீழ் இன்று சிறப்பு ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன.

குறித்த ஆலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முதன் முறையாக ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

தற்கொலை குண்டு தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

இந்நிலையில், புனித செபஸ்தியன் தேவாலயத்தில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. படையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், கடும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் குறித்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களும் அங்கு விஜயம் செய்திருந்தனர்.

எவ்வாறாயினும், வழக்கமாக வார இறுதியில் நடத்தப்படும் ஆராதனை வழிபாடுகளை நடத்துவது குறித்து இதுவரையிலும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.