இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம்

Report Print Kamel Kamel in சிறப்பு

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கான சகல உதவிகளையும் வழங்கத் தயார் என தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலை தீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுன்லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பில் இலங்கை சவால்களை எதிர்நோக்கி வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எந்த நேரத்திலும் நேசக் கரம் நீட்டி வரும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக 760 மில்லியன் யூரோ உதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.