இலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர்! தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் தனது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தரான Anders Holch Povlsen மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஸ்கொட்லாந்து மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Anders Holch Povlsen ஸ்கொட்லாந்தில் மிகப் பெரிய நில உரிமையாளராக கருதப்படுகின்றார். இந்நிலையில், கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் அவர்களது மூன்று பிள்ளைகள் உயிரிழந்தனர்.

ஐந்து வயதான Alfred, 12 வயதான Agnes, மற்றும் 15 வயதான Alma ஆகிய மூவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். கொழும்பு சங்ரிலா நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் வார்த்தை தெரிவித்த ஸ்கொட்லாந்து மக்களுக்கு Anders Holch Povlsen மற்றும் அவரது மனைவி ஆகியோர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், “உங்களின் ஆறுதல் வார்த்தைகள் எங்களின் இதயங்களை தொட்டன. நாங்கள் எங்களது மூன்று அன்பானவர்களையும் இழந்து விட்டோம்.

ஸ்கொட்லாந்து எங்களது குடும்பத்திற்கு தனிச்சிறப்பு மிக்க நினைவுகளை அளித்திருக்கின்றது. இந்த காரணத்திற்காகவே நீங்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகள் எங்களின் இதயங்களை தொட்டன.

இலங்கையில் இடம்பெற்ற அந்த துயர சம்பவத்தில் தமது அன்பானவர்களை இழந்த குடுமபங்களுக்கு எங்களது இரங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்கள் மூன்று பிள்ளைகளின் அன்பான நினைவும், அவர்களின் ஆத்மாவும் எங்களின் இதயத்தில் எப்போதும் இருக்கும்” என Anders Holch Povlsen தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.