ஞானசார தேரரை இன்னும் விடுதலை செய்யவில்லை!

Report Print Murali Murali in சிறப்பு

பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

அவர், தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறார் எனவும் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியிடமிருந்து, ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அந்த செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, சிறைச்சாலை பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று விடுதலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன் அவரது விடுதலை தொடர்பிலான ஆவணங்களில் நேற்று மாலை கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மாலை 3 மணிக்கு ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவார் என பொதுபலசேனா அமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.