தனது இல்லத்திற்கு செல்லும் பாதையை மூடிய மகிந்த! பலர் கைது! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அதிக அளவான செய்திகள் மக்களால் படிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தன.

அவ்வாறு அதிகளவில் படிக்கப்பட்டு பகிரப்பட்ட அதி முக்கிய செய்திகளை தொகுத்துள்ளோம். அவற்றை காணலாம்,

01. தென்னிலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு! பொலிஸார் தகவல்

களுத்துறையிலுள்ள பாடசாலைக்கு அருகில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

02. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்து கோவிலிற்கு நேர்ந்த கதி

தொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மாணப் பணிகள் காரணமாக நேற்றைய தினம் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

03. தனது இல்லத்திற்கு செல்லும் பாதையை மூடிய மகிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள விஜேராம மாவத்தையை மீண்டும் மூடுமாறு அவர், தனது பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

04. கம்பஹாவில் திடீர் சோதனை! அரசியல்வாதி உட்பட பலர் கைது

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05. பௌத்த பெண்களுக்கு கருத்தடை செய்த மருத்துவர் யார்? ஆதாரத்துடன் சரமாரி கேள்விகள்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புள்ள மருத்துவர் ஒருவர் நாட்டில் 4000 பௌத்த பெண்களுக்கு மகப்பேற்றுக்கான சிசேரியன் சத்திர சிகிச்சையுடன் அவர்கள் அறியாத வகையில் கருத்தடை சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளதாக நேற்றைய தினம் தேசிய பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

06. தென்னிலங்கையை மீண்டும் பரபரப்பாக்கிய வெடிகுண்டுகள்! பின்னணி குறித்து பொலிஸார் தகவல்

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அமைதியின்மை உருவாக்கும் வகையில் சூழ்ச்சிக்கார கும்பல் ஒன்று செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

07. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் நடந்தது என்ன - தகவல் வெளியிட்டுள்ள சந்தேக நபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழிற்நுட்ப பொறியியலாளரான அக்ரம் அஹக்கம் என்பவர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

08. ஆதாரங்கள் இருக்கின்றன! ரிசாட் தொடர்பாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்

கடந்த 21ஆம் திகதி மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நாட்டு மக்கள் அனைவருமே இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

09. ஐ.எஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்களிற்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம்

பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலின் முன்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இன்று ஜும்மா தொழுகையின் பின்னர் நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10. கொச்சிகடையில் ஐந்து மாடிக் கட்டடத்திற்கு தீ வைத்த மர்ம நபர்

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்திலுள்ள கட்டடம் ஒன்றுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்