தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்! இலங்கையர் ஒருவர் வெளிநாட்டில் கைது

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை மியன்மார் நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“கடந்த மாதம் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதலுக்கும் அப்துல் சல்மான் இர்ஷாட் மொஹமட் என்ற 39 வயதுடைய நபருக்கும் தொடர்பிருப்பதாகவும் அவரைத் தேடுவதாகவும் அண்மையில் மியன்மார் பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் மியன்மாரிலுள்ள யங்கூன் எனும் நகரிலுள்ள குடிவரவு அலுவலகமொன்றுக்கு விசாவை புதுப்பிப்பதற்காக சென்றிருந்த போது அவரை மியன்மார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.