மிஸ் யுனிவர்ஸ் போட்டி! பட்டத்தை பெற களமிறங்கும் இலங்கை தமிழ் பெண்

Report Print Sujitha Sri in சிறப்பு

டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு இலங்கை தமிழ் பெண்ணான நர்வினி டேரி ரவிசங்கர் தெரிவாகியுள்ளார்.

உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியுடன் இணைந்த சர்வதேச போட்டியாக டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டி காணப்படுகிறது.

இந்த போட்டியில், இலங்கையில் பிறந்து தனது ஒன்பதாவது வயது முதல் டென்மார்க் பிரஜையாகவுள்ள நர்வினி டேரி ரவிசங்கர் இறுதி சுற்றுக்கு தகுதியாகியுள்ள தமிழ் பெண்ணாக விளங்குகிறார்.

இந்த போட்டியின் இறுதி சுற்றில் வெற்றி பெறுபவர் அடுத்த கட்டமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதுடன், அங்கு ஏனைய நாடுகளின் வெற்றியாளர்களுடன் போட்டியிட வேண்டும்.

இதேவேளை, நர்வினி டேரி ரவிசங்கர் டென்மார்க்கின் முதலாவது மிஸ் யுனிவர்ஸ் தமிழ் போட்டியாளர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும், டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழகத்தில் சமூக நலத்துறையில் முதுமாணி கற்கையில் ஈடுபட்டுள்ள இவர் பல்துறையிலும் திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Latest Offers