வெள்ளவத்தை - கல்கிஸ்ஸை பகுதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றோம்.

மேலும் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.

01. பதவி விலகல் தொடர்பில் ரிஷாத், அஸாத், ஹிஸ்புல்லா ஆகியோரின் முக்கிய அறிவிப்பு

எமது பதவிகளிலிருந்து நாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். நாம் பதவிகளிலிருந்து விலகுவதை எமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, பதவிகளிலிருந்து விலக மாட்டோம் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

02. அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம்! முஸ்லிம் மக்களும் களத்தில்

அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவு தெரிவித்து மாத்தளை, ரத்தோட்டை நகரில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

03. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

04. கொழும்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி போன்று நடித்த மொஹமட் நிசார் இம்ரான் கைது

இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜர் போன்று நடித்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கை செய்யப்பட்டுள்ளார்.

05. அதிகாலையில் பொலிஸாருக்கும் மர்மநபருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம்!

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை தென்னிலங்கையில் பொருஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

06. அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார்

07. வெள்ளவத்தை - கல்கிஸ்ஸை பகுதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை வரையான கடலில் கறுப்பு நிற எண்ணெய் படிமங்கள் படிந்துள்ளதாக கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

08. சஹ்ரான் கைது செய்யப்படுவதை தடுத்த மைத்திரி?

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்திய சஹ்ரான் ஹசீமை கைது செய்ய பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என தெரியவந்துள்ளதாக லங்கா என்ற சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

09. கனடாவில் ஆபத்தை ஏற்படுத்த முயன்ற இலங்கை தமிழ் இளைஞன் கைது

கனடாவின் ரொரன்ரோ பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.