தீவிரவாதி சஹ்ரானுக்கு உதவிய பிரபலம்! அசாத் சாலி வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

தீவிரவாதி சஹ்ரான் ஹிசிமுக்கு, அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார முன்னாள் அமைச்சர் ஏ.எச்.ஏம்.ஹலீமின் சகோதரரான சஹீமின் ஆதரவு வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி சாட்சியமளித்தார்.

இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“நான் ஆளுநராக இருந்த காலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத் தொடர்பிலான விடயங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று முறை தெரிவித்திருந்தேன்.

நான் ஊடக சந்திப்புக்களிலும், பாதுகாப்பு செயலாளரிடமும் சொல்ல வேண்டிய அத்தனை தரப்பினரிடமும் தெரிவித்திருந்தேன். இறுதியாக பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து காணொளிகளை முன்வைத்தும் கூறினோம்.

தாக்குதலுக்கு முன்னதாக தௌவ்ஹீத் ஜமாத்தின் 08 பேரது பெயர்கள் தொடர்பான எச்சரிக்கை கடிதம் எனக்கு கிடைத்தவுடன் பொலிஸ்மா அதிபர் பூஜித்தவுக்கு தொலைபேசி ஊடாக பேசினேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.