சஹ்ரானின் நெருங்கிய சகாவை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சிக்கல்!

Report Print Murali Murali in சிறப்பு

தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிம் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மொஹம்மட் மில்ஹான் எனும் நபரை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரிப்பதில் தொடர்ந்தும் சிக்கல்கள் நிலவுகின்றன.

பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து 24 மணி நேரத்தில் மொஹம்மட் மில்ஹான் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இலங்கை அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சவூதி பயங்கரவாத தடுப்பு நிலையத்தில் மொஹம்மட் மில்ஹான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மில்ஹானை இலங்கை அழைத்து வந்து தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இந்த பிரதான சந்தேகநபரான மொஹம்மட் மில்ஹானை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவும் சவூதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இதனால், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை நிலவுவதாகவும், அதனால் இதுவரை அவரை அழைத்து வர முடியாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவரை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரிக்க சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதியிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers