விடுதலைப் புலிகளைப் போல இவர்கள் அல்ல! மீளவும் விடுக்கப்படும் எச்சரிக்கை! செய்தி தொகுப்பு

Report Print Sindhu Madavy in சிறப்பு

நேற்றைய தினம் எமது தளத்தில் அதிக அளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் அதிக அளவான செய்திகள் மக்களால் படிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தன.

அவ்வாறு அதிகளவில் படிக்கப்பட்டு பகிரப்பட்ட அதி முக்கிய செய்திகளை தொகுத்துள்ளோம். அவற்றை காணலாம்,

01. ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்

நாவலப்பிட்டி - கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் வைத்து தங்க மாலையொன்றை அறுத்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

02. 3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

03. கொழும்பில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் இளம் தாய், பிள்ளைகள் தொடர்பான தகவல்கள்

கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

04. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள்? சுமந்திரனின் சரமாரியான கேள்விகள்

ஆடை தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டதால் முஸ்லிம் பெண்களில் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் தொழிலுக்குச் செல்வதில்லை. இது தொடர்பில் உங்களுக்குத் தெரியுமா என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்த சுற்று நிருபம் தொடர்பில் சரமாரியாக கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.

05. விசாரணைகளில் தடுமாறும் ஹிஸ்புல்லாஹ்! உண்மையில் நடந்தது என்ன? முழுமையான காட்சி

நாட்டில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலானது பல்வேறு மாற்றங்களை இன்றுமட்டில் ஏற்படுத்தித் தான் வருகின்றது.

06. பௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு

பதுளையில் பௌத்தர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஆல மரத்திற்கு இனவாதிகள் தீ வைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

07. ஹிஸ்புல்லாஹ்வின் கருத்தினால் சர்ச்சை! மைத்திரி ரணிலும் விசாரணைக்கு..?

தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி மைத்திரியையோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தகுமாரசிறி தெரிவித்துள்ளார்.

08. ஒரே கடவுளை நாடிச் செல்லும் தமிழர்கள், சிங்களவர்கள்! அப்படியானால் 30 வருடகால யுத்தம் ஏன்?

தமிழர்களும், சிங்களவர்களும் கதிர்காம கந்தனை நாடிச் செல்லும் போது 30 வருடகால யுத்தம் ஏன் செய்யப்படது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

09. விடுதலைப் புலிகளைப் போல இவர்கள் அல்ல! மீளவும் விடுக்கப்படும் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று தற்போது நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட குழுவினரைக் கருதிவிடக்கூடாது. சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே இவர்கள் செயற்பட்டார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

10. பல்வேறு நெருக்கடிகள் கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மூடப்படும் அபாயம்!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGT) திறமையற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஆளணி பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Latest Offers