பிற்போடப்பட்டது கனடாவில் நடைபெற இருந்த CTR நட்சத்திரவிழா!! காரணம் என்ன?

Report Print Murali Murali in சிறப்பு

கனடாவில் எதிர்வரும் ஜுன் 29, 30ம் திகதிகளில் நடைபெற இருந்த கனேடிய தமிழ் வானொலியின் 'நட்சத்திர விழா 2019' நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.

கனடா டொரன்டோவில் வன்னி வீதியில் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'CTR நட்சத்திரவிழா' சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிகழ்வு புதிய பொலிவுடன் இரு நாள் நிகழ்வாக எதிர்வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01ம் திகதிகளில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் பற்றி தமிழ்வின் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த கனேடிய தமிழ் வானொலியின் நிர்வாகம்,

"உலகம் முழுவதும் உள்ள அடுத்த தலைமுறை தமிழ் கலைஞர்களை அங்கீகரிப்பதற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்ற 'IBC தமிழா Toronto 2019' பிரமாண்ட நிகழ்வு சிறப்புற நடைபெறவேண்டும்.

ஆகையினாலேயே, தாம் வருடாவருடம் நடாத்திவருகின்ற நட்சத்திரவிழா நிகழ்ச்சியை பிற்போட்டதாகவும், ஈழத்தமிழ் கலைஞர்களின் கனவு மேடை வெற்றிபெறவேண்டும் என்று தாம் வாழ்த்துவதாகவும் தெரிவித்தது.

இதேவேளை, கனேடிய தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டு 20 வருட பூத்தியை முன்னிட்டு CTR நட்சத்திரவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.