மாபெரும் ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019! இலவச போக்குவரத்து சேவை

Report Print Malar in சிறப்பு

ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019ஆம் ஆண்டிற்கான நிகழ்வு கனடாவில் நடைபெற உள்ளது.

கனடா, டொரண்டோ ஸ்கொட்டியாபங்க் அரங்கில் இம்மாதம் 29ஆம் திகதி மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாக உள்ளது.

இதனை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இருந்து இலவச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன.

ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019 நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இம்மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் 416.613.8830 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் இருக்கைகளை உறுதி செய்யலாம்.

1. சொந்த வாகனங்களில் வருபவர்கள் - Scotiabank Arenaவைச் சூழ கட்டணம் செலுத்தும் வாகனத் தரிப்பிட வசதி போதுமான அளவு உள்ளது. வாகனத் தரிப்பிடங்களை முன்கூட்டியே www.parking.com தளத்திலும் பதிவு செய்ய முடியும்.

Scotiabank Arena முகவரி: 40 Bay Street, Toronto.

2. Tic subway - டொரண்டோ சுரங்கப் பாதையைப் பாவித்தால் நீங்கள் இறங்க வேண்டிய இடம் Union Station ஆகும். யூனியன் நிலையத்திலிருந்து சுரங்கப் பாதையூடாக நேரடியாகவே Scotiabank Arena Gate 1ஐ சில நிமிடங்களில் நடந்து சென்றடைய முடியும். சனிக்கிழமை தொடர்ச்சியான சுரங்கப் பாதை சேவையுள்ளது.

3. Go Transit - பேருந்து மற்றும் புகையிரத நேர அட்டவணையை நீங்கள் www.gotansit.com இணையத் தளத்தில் பார்க்க முடியும். நாள் முழுவதும் Go பேருந்து மற்றும் Go புகையிரத சேவைகள் உள்ளன.

ஒரு மேடையில் ஆயிரம் கலைஞர்கள் உள்ளடக்கிய இந்நிகழ்வில் ஆடல், பாடல் மற்றும் நகைச்சுவை நாடகம் ஆகியன இடம்பிடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.