இலங்கை தாக்குதலின் எதிரொலி! புழல் சிறையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் இடம்பெற் தொடர் தற்கொலை குண்டுதாக்குதலையடுத்து, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலை குண்டுதாக்குதலை நடத்தியிருந்தனர்.

இதில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் அமைப்பிற்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டது.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி, அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் என அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில், சஹ்ரானுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது விசாரணைகளில் தெரிய வந்தது.

இதனையடுத்து, கோவையில் பலர் கைது செய்யப்பட்டனர். கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் ஒருவரை இரகசிய இடத்திற்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த பின்னயிலேயே, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.