காத்தான்குடியில் தீவிரவாதி சஹ்ரான் உருவானது எப்படி? விசாரணையில் வெளியாகும் புது தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், சூபி முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கிய காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான், தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக சஹ்ரான் ஹாசிம் அடிப்படைவாதியாக எவ்வாறு மாறினார் மற்றும் அவரின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் கண்ணீர் மல்க சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் வழங்கிய சாட்சியத்தை முழுமையாக அறிந்துகொள்ள காணொளியை பார்க்கவும்.