மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு!

Report Print Murali Murali in சிறப்பு

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த குற்றங்களிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தாக்கல் செய்த மனு மீதான அவசர விசாரணை இன்று இடம்பெற்றவேளையே தகவல் உரிமை ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதியின் கையொப்பம் அடங்கிய எந்த உத்தரவும் தங்களிற்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுக்கொள்கை நிலையத்தின் மனு தொடர்பான விசாரணையின் போது நீதியமைச்சினதும், சிறைச்சாலை திணைக்களத்தினதும் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தூக்கிலிடும் உத்தரவில் உள்ள நான்கு கைதிகளில் இரண்டு பேர் சிங்களவர்கள் எனவும் மற்றைய இருவர் தமிழர் மற்றும் முஸ்லிம் எனவும் அண்மையில் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.