ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கொடுத்து வரும் அழுத்தம்!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் நலன்களை பாதுகாக்க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததும், அங்குள்ள தமிழர்கள் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வுகாண மத்திய அரசு வாய்ப்பு வழங்கியது.

அனைத்து கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி, 13வது திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதியான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் பற்றி இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

நிறைவேற்ற வேண்டும்

தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகிய விருப்பங்களை தீர்க்கும் வகையில் ஒரு தீர்வுகாண்பது மற்றும் தேசிய சமரசத்துக்கான நடவடிக்கையை முன்னெடுக்கும்படி இலங்கை அரசு, அரசியல் கட்சிகள், அங்குள்ள மக்கள் ஆகியோரிடமும் இந்திய அரசு தொடந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers