ரணிலும், மகிந்தவும் இரசிய பேச்சுவார்த்தை! 12.10க்கு நடந்தது என்ன?

Report Print Murali Murali in சிறப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசாங்கம் திரட்டியது எனவும் அவர் கூறியுள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால், இருவரும் தவறிழைத்துவிட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் 12.10 மணிக்கு இடம்பெற்றிருந்தது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவை? இதனை இரு தலைவர்களும் நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.1949 இல் இருந்து இன்று வரை அரசாங்கங்களுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்.” என்றார்.

Latest Offers