பயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா! சிறப்பு பார்வை

Report Print Murali Murali in சிறப்பு

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தொடர்தற்கொலை குண்டு தாக்குதலில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதேவேளை, 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை சேர்ந்த சஹ்ரான் ஹசீம் மூலகர்த்தாவாக இருந்து செயற்பட்டிருந்தார். அவர் இந்த தாக்குதலின் போது உயிரிழந்தார்.

சஹ்ரான் ஹசீமின் குடும்பத்தினர் 15 பேர் கல்முனையில் பத்திரமாக இருந்த சூழலில் ஏப்ரல் 26ம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் அனைவரும் உயிரிழந்தனர்.

விசாரணையின் போது சஹ்ரான் ஹசீம் அடிக்கடி தமிழகம் மற்றும் கேரளாவிற்கு பயணம் செய்தது கண்டறியப்பட்டது. அவருடன் சமூக வலைதளங்களில் இணைந்து, மதம் குறித்த புதிய கொள்கைகளை அறிந்து கொள்தில் ஆர்வம் காட்டி வந்தனர்.

வஹாபிசத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர் சஹ்ரான் ஹசீமின் மதபோதகத்தில் மயங்கி அவருடைய வீடியோவை பார்க்கவும், அவரின் மதபோதத்தை பரப்பும் விரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் / கேரளாவில் தொடர் விசாரணையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA)

டிசம்பர் 4ம் திகதி, இலங்கையில் குண்டு வெடிப்பு நடக்கலாம் என்ற ரீதியில் இலங்கை புலனாய்வு துறைக்கு எச்சரிக்கை செய்தது இந்தியா. ஆனாலும் அந்த எச்சரிக்கையின் தீவிரத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் போன காரணத்தால் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சஹ்ரான் ஹசீமின் தமிழக வருகையை உறுதி செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.

அதில் தெற்காசியாவில் இஸ்லாமியர்களுக்காக தனி நாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் சிலர் திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஐ.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் குறித்த விசாரணையை விரைவுபடுத்தியது என்.ஐ.ஏ.

கோவை, ராம்நாதபுரம், சேலம், மதுரை, நெல்லை மற்றும் நாகை உள்ளிட்ட 10 இடங்களில் விசாரணையை தீவிரப்படுத்திய என்.ஐ.ஏ, நாகையில் அசன் அலி, மற்றும் ஹாரிஸ் முகமது என்ற இருவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தது.

விசாரணையில், அவர்கள் இருவரும் அமீரகத்தில் வேலை பார்த்த வண்ணம், ஐ.எஸ். அமைப்பிற்கு நிதி திரட்டியதும், அதனால் அவர்கள் நாடு கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

அவர்கள் மட்டுமல்லாது தேனி, மதுரை, திருவாரூர், கீழக்கரை, நாகை, ராமநாதபுரம், தஞ்சை, நெல்லை ஆகிய இடங்களை சேர்ந்த 14 பேரும் இவர்களைப் போன்றே நாடு கடத்தப்பட்டவர்கள் என்றும், அவர்கள் டெல்லியில் பதுங்கியுள்ளார்கள் என்றும் விசாரணையில் அறிவித்தனர்.

டெல்லியில் பதுங்கியிருந்த 14 பேரையும் கைது செய்து, தனி விமானம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 14 பேரையும் புழல் சிறையில் அடைத்து வைத்து விசாரணை செய்து வருகிறது என்.ஐ.ஏ.

கைது செய்யப்பட்டவர்கள் யார்?

வஹ்தத் – இ – இஸ்லாமி ஹிந்த் (Wahdat-e-Islami Hind) என்று தமிழகத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் அமைப்பை சேர்ந்த இவர்கள் அன்சருல்லா என்ற அமைப்பினருடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தமிழகத்தில் அன்சாருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை நிறுவ முயன்று வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. சனிக்கிழமை சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் விசாரணை நடைபெற்றது.

இரண்டு இடங்களில் இருந்தவர்களை என்.ஐ.ஏ கைதும் செய்துள்ளது. ஒருவர் சென்னையை சேர்ந்த சையத் புகாரி ஆவார். வஹ்தத் – இ – இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலைவர் இவர்.

மற்றொருவர் ஹசன் அலி. இந்த அமைப்பு 2009ம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புகாரியின் உதவியாளர்களான நாகையை சேர்ந்த யுனூஸ்மரிக்கார் மற்றும் ஹரிஷ் முகமதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரையும், விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 ( Unlawful Activities (Prevention) Act) கீழ் கைது செய்துள்ளனர்.

Latest Offers