149 ஆண்டுகளுக்கு பின்னரான அபூர்வ நிகழ்வு! இலங்கையர்கள் வெற்று கண்களால் பார்த்து ரசித்த காட்சி

Report Print Sujitha Sri in சிறப்பு

சுமார் 149 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அதிகாலை நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணத்தை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்த்து ரசித்துள்ளனர்.

இலங்கையர்களுடன் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல இடங்களை சேர்ந்த மக்களும் இந்த வாய்ப்பை பெற்றிருந்தனர்.

சரியாக இன்று அதிகாலை 12.13 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணமானது 1.31 மணிக்கு உச்சம் அடைந்து பின் அதிகாலை 4.30இற்கு நிறைவுபெற்றுள்ளது.

இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் இது என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்வதே நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) எனப்படும்.

எனினும் சந்திர கிரகணமானது ஒரு முழு நிலவு அதாவது பௌர்ணமி நாளில் மட்டுமே நிகழ்கிறது.

வீடியோ - திருமால்

Latest Offers