சாதனைகளை அள்ளிக் குவிக்கும் யாழ். தமிழ்ப் பெண்! எத்தனை பேருக்கு தெரியும்?

Report Print Sujitha Sri in சிறப்பு

யார் இந்த தர்ஜினி சிவலிங்கம்? இன்று உலகளவில் பேசப்பட்டு வரும் இந்த தர்ஜினியைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

பலரையும் அண்ணார்ந்து பார்க்க வைக்கும் உயரம். உயரம் மட்டுமல்ல அவர் அடைந்த சாதனைகளின் உயரங்களும் பெரியது தான்.

இலங்கையின் வலைப்பந்து நாமத்தை சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.

ஆசியாவின் உயரமான வலைப்பந்து வீராங்கனை என்ற பெருமைக்கு உரிய யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி தான் தர்ஜினி சிவலிங்கம்.

இதேவேளை பிரித்தானியாவின் லிவர்பூலில் இம்முறை நடைபெற்று வரும் உலகக் கிண்ண வலைப்பந்து போட்டியில் 50 - 88 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில் இலங்கை வலைப்பந்து அணியின் வீராங்கனையான தர்ஜினி ஷிவலிங்கம், ஒரே போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers