வவுனியா இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Vethu Vethu in சிறப்பு

பெருந்தொகை பணத்தை சட்டவிரோதமாக நாடு கடத்த முயன்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

89 மில்லியன் ரூபா பெறுமதியான சவுதி ரியால் நாணயத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முனைந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான AJ- 274 என்ற விமானத்தின் ஊடாக செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது குறித்த இளைஞனின் பயண பொதியை சோதனையிட்ட போது பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் வவுனியாவை சேர்ந்த வர்த்தகர் என விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

அவரது பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு அறிவித்துள்ளது.