இந்தியாவை வஞ்சித்து பாகிஸ்தானுக்கு தளம் கொடுத்த சிறி லங்கா! நடந்தது என்ன?

Report Print Niraj David Niraj David in சிறப்பு

இந்தியாவின் வரலாற்றில் இந்தியாவுக்கு தொடர்ந்து தண்ணிகாண்பித்துக்கொண்டு வருகின்ற ஒரு நாடு இந்தியாவுக்கு அயல்நாடாக இருக்கின்றது.

ஒரு வருடம் அல்ல சில வருடங்கள் அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் ஏழு தசாப்தங்களாக அந்த நாடு இந்தியாவை ஏமாற்றியபடியும்; இந்தியாவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டும்;;இ இந்தியாவை கிட்டத்தட்ட நேரடியாகவே எதிர்த்தும் வருகின்றது.

அந்த நாட்டின் பெயர்- சிறிலங்கா.

இந்தியா தனது சொந்த மக்களான தமிழ்நாட்டு மக்களை விரோதித்துக்கொண்டும், இந்தியாவை தமது தந்தையர் தேசமாகக் காலாகாலமாகப் பார்த்துக்கொண்டுவந்த ஈழத்தமிழ் இனத்தை புறந்தள்ளிவிட்டும் சிறிலங்காவின் சிங்கள ஆட்சிக்கு நட்புக்கரம் நீட்டிய சந்தர்ப்பங்கள் பற்றியும், பதிலுக்கு சிறிலங்கா எப்படி இந்தியாவை வஞ்சித்தது என்பது பற்றியும் பார்வையைச் செலுத்துகின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவணம்.