இலங்கை பயங்கரவாதிகள் இருவர் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்சில் உள்ள பயங்கரவாதிகளிற்கு குண்டு தயாரிப்பது மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்குவது போன்ற விடயங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இவர்கள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவியுள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மனிலாவின் சர்வதேச விமானநிலைய அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். இருவரும் தற்கொலைகுண்டுதாரிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருவரினது குடும்பத்தவர்களும் பிலிப்பைன்சில் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்க் கெவின் சம்கூன் என்ற பயங்கரவாதி இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அவரது தாய் துபாயை சேர்ந்தவர் தற்போது பிலிப்பைன்சில் பணிப்பெண்ணாக தொழில்புரிகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மற்றொரு பெண்மணியும் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவியுள்ளார். இவர் இலங்கை பிலிப்பைன்ஸ் கடவுச்சீட்டுகளை கொண்டவர் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் பெண்களிற்கும் குழந்தைகளிற்கும் குண்டு தயாரிப்பு பயிற்சிகளை வழங்கியுள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.