தமிழ் மக்களின் மனத்திலிருந்து நீங்காத வடுவாக மாறிய செஞ்சோலை படுகொலை நாள்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் தமிழ்கள் மத்தியில் எத்தனை நாட்கள் கடந்து சென்றாலும், மனதை விட்டு நீங்காக சில நாட்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நாள்தான் செஞ்சோலை படுகொலை தினம்.

கடந்த 2006 ஆகஸ்ட் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் முல்லைத்தீவு வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் மீது வான் படையினர் கண்மூடித்தனமான வான் தாக்குதலை நடத்தினர்

இந்த தாக்குதலில் 54 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன.

இது தமிழின அழிப்பின் கட்டவிழ்த்து விடப்பட்ட மற்றுமொரு மிகப்பாரிய படுகொலையாக வரலாற்றில் தடம் பதித்தது.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

கொடூர சிந்தனையுடையவர்களால் மட்டுமே அத்தகைய ஒரு விமானத்தாக்குதலை நடத்த முடியும். ஏனெனில் அந்த நாளில் அந்த இடத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆயுதம் தரிக்காத வெறும் பாடசாலை மாணவிகள் மட்டுமே.

அப்பாவிச் சிறார்களுக்கு இழைக்கப்பட்ட அநாகரிகமான இந்தக் கொடுமையை நேரில் வந்து காணுமாறு ஐ.நா. மற்றும் சர்வ தேச சிறுவர் நல அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.

சர்வதேச அமைப்புகளுக்கு நேரில் பார்க்க அழைப்பு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பிரதி நிதிகளும் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய (யுனிசெவ்) பிரதிநிதிகளும் அனர்த்தம் நிகழ்ந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர்.

அப்பாவிப் பிஞ்சுகள் ஒன்றுசேரக் கொன்றுபோடப்பட்ட இந்தக் கொடூர நிகழ்வு உலகெங்கிலும் இருந்த தமிழர் உள்ளங்களை உலுக்கி விட்டிருக் கிறது. அப்படிப்பட்ட இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே தவிர நீதி கிடைக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..

Latest Offers