உலக விஞ்ஞானிகளை மிஞ்சிய இலங்கையர்கள்! கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

Report Print Vethu Vethu in சிறப்பு
1849Shares

இலங்கை விஞ்ஞானிகள் முதல் முறையாக புதிய கிரக மண்டலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

வானியல் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் புதிய கிரக மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே இந்த புதிய கிரக மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.