நட்சத்திர விடுதியில் கோத்தபாய ஏற்பாடு செய்த விருந்து! மைத்திரி தரப்பினரும் பங்கேற்பு

Report Print Murali Murali in சிறப்பு

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச இன்றிரவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வு ஷங்ரிலா நட்சதிர விடுதியில் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை விகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும், மகிந்த அமரவீர். தயாசிறி ஜயசேகர, லசந்த அலகியவண்ண உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றை விருந்துபசாரத்தில் கலந்துகொள்ள முடியாத உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியிருந்ததாகவும் அந்த செய்தியில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.