அவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக அகதிகள் போராட்டம்!

Report Print Murali Murali in சிறப்பு

அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக அவுஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியான்மர், இலங்கை உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,000 அகதிகள் இந்தோனேசிய முகாம்களிலும் வீதிகளிலும் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற காத்திருக்கக்கூடிய அகதிகள். ஆனால், கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் அகதிகள் விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை அவுஸ்திரேலிய அரசு பின்பற்றி வருகிறது.

இந்த சூழலில், மனிதாபிமானமற்ற விதிகளை ஆஸ்திரேலிய அரசு திரும்ப பெற வேண்டும் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் சமர்பித்த கடிதத்தில் அகதிகள் கோரி இருக்கின்றனர்.

“நாங்கள் இந்தோனேசியாவில் எந்த அடிப்படை உரிமையுமின்றி கிடக்கிறோம். மன ரீதியாகவும் அகதிகள் பாதிக்கபப்ட்டிருக்கின்றனர்னர்,” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகில் வர முயற்சிக்கும் அகதிகளை முழுமையாக நிராகரித்து வருகின்றது.

அதே சமயம், இந்தோனேசியாவில் 2014 ஜூலை 1க்கு முன்னதாக ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிந்த அகதிகள் மட்டுமே மனிதாபிமான திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுவார்கள என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...