விடுதலைப் புலிகள் குறித்து முரளிதரன் பேசியது உண்மையா?

Report Print Murali Murali in சிறப்பு

“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது.

தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளன. இந்நிலையில், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவேண்டும்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியதாகவே தான் கருத்து வெளியிட்டிருந்தேன்.

இந்த நிலையில், இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்துடனான ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணமாகும். இந்த நிலையில், இலங்கையின் பாதுகாப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, “தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்திருந்தேன்.

இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிலேயே முத்தையா முரளிதரன் மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers