அம்பாறையில் தனிமையில் வாழ்ந்த யுவதி மாலினிக்கு லண்டனிலிருந்து கிடைத்த எதிர்காலம்

Report Print Malar in சிறப்பு

ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் நாளடைவில் மறைந்து கொண்டு சென்று விடுகின்றனர்.

அந்தவகையில் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ இசைக்குழுவின் பாடகியை ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சி கண்டு பிடித்தது.

அம்பாறை மாவட்டத்தில் கழுகொல்லை கோமாரியில் வசிக்கும் மாலினி தமிழீழ இசைக்குழுவின் பாடகியாவார். இவர் தனது தாயுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

அந்தவகையில் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் பாகம் 30இல் ஒளிப்பரப்பான இவரது நிகழ்ச்சியை பார்த்த பலர் இவருக்கு உதவ முன்வந்தனர்.

மாலினி புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் வீடு மற்றும் கிணறு கட்டியத்தோடு, தனது வாழ்வாதாரத்தை விருத்தி செய்துள்ளார்.

மேலும் இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியை பார்த்து மாலினியோடு தொடர்பு கொண்ட பிரித்தானியா வாழ் அன்பர் ஒருவர் அவரின் எதிர் கால வாழ்க்கையின் துணையாக இணைந்துள்ளார்.

அந்த வகையில் மாலினிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளமை மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும்.

இது போன்று ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் தொண்டுகள் மேலும் பல தொடர வேண்டும் என அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.