அவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தபாய ராஜபக்ச விடுதலை

Report Print Kamel Kamel in சிறப்பு

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் கப்பல் ஒன்றை நடாத்தி செல்வதற்கு இடமளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்து கோத்தபாய உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கோத்தபாய உள்ளிட்ட எட்டு பேரும் குற்றமற்றவர்கள் என அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோத்தபாய ராஜபக்சவினால் கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவன்ட் கார்ட் வழக்கில் கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை விடுவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.