சிலோன் பின்னர் இலங்கை ஸ்ரீ லங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட காரணம் என்ன?

Report Print Kanmani in சிறப்பு

இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டித் தீவு இலங்கை ஆகும். இதற்குள் இரண்டு நாடுகள் உள்ளன ஒன்று சிறிலங்கா மற்றொன்று தமிழீழம் இலங்கை எனும் சொல் மொத்த தீவினையும் குறிக்கும்

இத்தீவின் வரலாறு 2500 ஆண்டுகள் பழமையானது. இராவணன் வாழ்ந்தார், சீதையை கடத்தினார், ராமன் பாலம் அமைத்தார் எனக்கூறப்பட்டாலும் கி.மு.6ம் நூற்றாண்டிலிருந்து தான் அந்நாட்டின் வரலாறு ஓரளவு சிங்களவர்களால் உருவாக்கப்பட்ட மகாவம்சம் என்ற நூல் மூலம் கிடைக்கின்றது.

இத்தீவு, குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் (ஆங்கிலேயரால் 3 நூற்றாண்டுகளாக வழங்கப்பட்ட பெயர் ) என்று அழைக்கப்பட்டது.

தற்போதும் சில சமயங்களில் 'சிலோன் 'என்பது பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் சிங்களவர் இலங்கை என்று ஏற்கனவே இருந்த பெயரினை அரசியல் யாப்பில் , தங்கள் மொழி உச்சரிப்புக்கு ஏற்றாற்போல் முழு இலங்கைக்கும் அரசியல் செயற்பாடுகளிற்கு சிறிலங்கா என அழைக்கபட்டது .இப்பெயரே இன்று வரை நிலை பெற்றுள்ளது.

ஆனால் இப்பெயர் ஈழப்போர் போர் நடந்த காலந்தொட்டு இன்று வரை பெரும்பாலும் தென்னிலங்கையினையே குறிக்கிறது . வடக்கு , கிழக்கு இலங்கையினைக் குறிக்க ஈழம்,தமிழீழம் ஆகிய சொற்கள் வழங்கப்படுகின்றன. தமிழீழம் என்னும் சொல் தமிழர் தனிநாடு ஆக கேட்ட இடப்பகுதிகளைக் குறிக்கும்.

ஈழம் மகேந்திர மலையடிவாரத்தில் அமைந்துள்ளது . பொன் மிகுதியாக இருந்த காரணத்தினாலே பொன் நாடு என்னும் பொருள் கருதி பண்டைத் தமிழர் ஈழம் எனப் பெயரிட்டு அழைத்தமை வரலாற்று உண்மையாகும்.

எனவே ஈழம் என்னும் சொல் லங்கா என மொழி பெயர்க்கப்பட்ட தென்பதும், லங்கா தமிழ் மரபின் படி இலங்கை என உருத்திரிந்ததே லங்கா, இலங்கை என்ற பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பின் ஏற்பட்ட பெயர்.இன்று இலங்கைக்கு ஸ்ரீலங்கா என்ற பெயரே வழக்கத்தில் உள்ளது. ஈழம் என்ற வழக்கு கி.பி. 12ம் நூற்றாண்டுக்கு பின் வழக்கு ஒழிந்துவிட்டது.

ஈழம் என்னும் இப்பெயரே ஆரியர் வருகையின் பின் வடமொழியாளர் தொடர்பு ஏற்பட்டதன் பின் அதாவது ஆதி காலத்தில் கந்தபுராணம் பாடிய காலத்திலேயே “லங்கா” என உருப்பெற்றது.சுருங்கச்சொல்லின் ஈழம் என்ற தமிழ் மொழியின் வடமொழிக்குரிய மொழிபெயர்ப்பு லங்காவேயாகும்.'

கி. மு. 307 ஆண்டு புத்த மதம் இலங்கைக்கு வந்ததாகும். ஆனால் லங்கா என்ற சொல் ஈழநாட்டிலும் பிற நாடுகளிலும் மிகுதியும் பரவலாக வழங்கத் தொடங்கியமை புத்த மதம் ஈழ நாட்டுக்கு வந்த பின்னரே ஆகும். அதன் பின்னரே ஈழம் என்ற சொல் அருகி மறைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...