கோத்தாவின் இரட்டைக் குடியுரிமைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட மகிந்த கையெழுத்திட்டார்!

Report Print Ajith Ajith in சிறப்பு

2005ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை பத்திரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளார்.

அரச தலைவர் என்ற வகையிலும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையிலும் இதனை அவர் மேற்கொண்டதாக இன்று சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சிரேஸ்ட உதவி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே வாதிட்டார்.

குறித்த நேரத்தில் அமைச்சரவை பதவியேற்காதபோதும் ஜனாதிபதி ஒருவருக்கு அந்த அதிகாரம் இருந்ததாக அவர் வாதிட்டார்.

கோத்தபாயவின் பிரஜாவுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த வாதம் இன்று முன்வைக்கப்பட்டது.

முன்னதாக கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமைக்கு மகிந்த ராஜபக்சவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டபோது அமைச்சரவை நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே அரசியலமைப்பின்படி அது செல்லுபடியாகாது என்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.

எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ஒருவருக்கு அந்த அதிகாரம் உள்ளளதாக கோத்தபாய ராஜபக்ச தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.