அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் மூவரை தமிழக பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டில் இருந்து வெளியேறிய பலர் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி, புதுச்சேரி, சென்னை, ஆரணி ஆகிய அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 11 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல முட்பட்ட நிலையில், இராமநாதபுரம் 'கியூ' பிரிவு பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக, தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.