யோஷித ராஜபக்சவுக்கு லெப்டினனட் கொமாண்டராக பதவி உயர்வு!

Report Print Murali Murali in சிறப்பு

லெப்டினனட் யோஷித ராஜபக்ச, தற்காலிகமாக லெப்டினட் கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.

அவருடன் பணிபுரிந்தவர்கள் லெப்டினட் கொமாண்டர்களாக நிரந்தரமாக பதவியுயர்த்தப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ச, தற்காலிகமாக லெப்டினட் கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் குறித்த பதவிக்கு தேவையான அடிப்படை தகுதிகளை நிறைவுசெய்த பின்னர், நிலையான லெப்டினட் கொமாண்டராக பதவியுயர்த்தப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.