யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக, பலாலி விமான நிலையம் மாற்றம்

Report Print Ajith Ajith in சிறப்பு

பலாலி விமானத்தளத்தின் பெயர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சால் பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்த விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் என்றும் ரத்மலானை விமான நிலையம், ரத்மலானை சர்வதேச விமான நிலையம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் யாழ்ப்பாண விமான நிலையத்தின் நிலையக் குறியீடு Jaf என்றும் மட்டக்களப்பு விமானநிலையத்தின் குறியீடு BTC என்றும் ரத்மலானை விமானநிலையத்தின் குறியீடு RML என்றும் அமையவுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தின் பணிகள் எதிர்வரும் 17ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.