மனுஸ்தீவில் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை! 50 டொலருக்குள் வாழ்க்கை நடத்த பணிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவிலிருந்து தலைநகர் Port Moresbyக்கு இடமாற்றப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அகதிகளுக்கு வாரத்துக்கு 50 டொலர்கள் மாத்திரம் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

குறித்த அகதிகள் மனுஸ்தீவிலிருந்து Port Moresby பிரதேசத்துக்கு மாற்றப்பட்டபோது தங்குமிட உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் தற்போது அகதிகளை தங்கிக்கொள்ளுமாறு கூறப்படும் இடங்களில் பாதுகாப்பு இல்லை.

குறிப்பிட்ட பிரதேசங்கள் ஆயுத முனையில் பல தடவைகள் கொள்ளையிடப்பட்டன என்றும் அங்குள்ள அகதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இங்கிருந்து வெளியேறும்போது தங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறு வருடங்களாக அகதிளாகவே இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு இதுதான் என்று அங்குள்ள அகதிகள் சமூகவலைத்தளங்களின் ஊடாக தங்களது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.