விடுதலைப் புலிகளின் தலைவரை ஏன் சந்திக்க முடியவில்லை ? இயக்குனர் அமீர் நெகிழ்ச்சியான பதிவு

Report Print Murali Murali in சிறப்பு

2009ம் ஆண்டு காலப்பகுதியிலேயே இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்த போதிலும் அது சில காரணங்களினால் முடியாமல் போனதாக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தநகர் பகுதியில் மாதிரி பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“2009ம் ஆண்டு இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்தோம். எனினும், போர் இறுதி கட்டத்தை அடைந்திருந்த நிலையில், இந்தியாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம்.

அப்போது இங்கிருந்து திரு நடேசன் உள்ளிட்டவர்கள் என்னை தொடர்புகொண்டு பேசியிருந்தார்கள். இந்த போர் முடிவுக்கு வந்துவிடும், நாங்கள் வென்றுவிடுவோம். போர் முடிவுக்கு வந்தவுடன் எங்கள் மண்ணுக்கு நீங்கள் வர வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எனினும், துரதிஷ்ட வசமாக நாங்கள் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டிருக்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.