விடுதலைப் புலிகளின் காலத்தில் பிரபாகரனுடன் மக்களை சந்தித்தேன்! இயக்குனர் பாரதிராஜா

Report Print Murali Murali in சிறப்பு

விடுதலைப் புலிகளின் காலத்தில் பிரபாகரனுடன் முகாம்களுக்கு சென்று மக்களை சந்தித்திருந்தேன் என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தநகர் பகுதியில் மாதிரி பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த பூமி ஒரு புண்ணிய பூமி. இந்த மண்ணில் நான் கால் வைத்திருப்பது நான் செய்த பெரும் பாக்கியம். ஒரு வீர தமிழச்சி கிளிநொச்சியில் தான் பிறந்திருப்பால்.

ஏனெனில் அந்த போராளி பெண்கள் அப்படியிருந்தார்கள். இந்நிலையில், பிரபாகரனுக்கு பிறகே உலக நாடுகளில் தமிழ் கலாசாரம் போய்ச் சேர்ந்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.